லட்டு யாருக்கு?


காமெடி நடிகர் சந்தானமும் இராம.நாராயணனும் இணைந்து தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் சூப்பர் ஹிட்டானாலும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.

சந்தானத்தை விட பவர்ஸ்டாருக்கு அதிக கிளாப்ஸ் கிடைப்பதால் சந்தானம் அப்செட் என்கிறனர் சிலர். இது ஒரு புறமிருக்க தன்னுடைய இன்று போய் நாளை வா படத்தின் கதையை தன் அனுமதியின்றி பயன்படுத்திவிட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளார் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ். படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதால் இராம.நாராயணனுக்கு படத்தின் உரிமையை விற்று விட்டதாக தெரிவிக்கிறார் புஷ்பா கந்தசாமி. இவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் மகள். கவிதாலயாவின் தயாரிப்பாளர்.

என்னுடைய கதையை விற்க புஷ்பா கந்தசாமிக்கு உரிமையில்லை என்றும் படத்தின் வசூல் கணக்கை தனக்கு காட்ட வேண்டும் என்றும் வழக்காடி வருகிறார் பாக்யராஜ். பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது. பாக்யராஜிக்கு நன்றி என டைட்டில் கார்டு போட்டுவிட்டதோடு கடமை முடிந்து விட்டதாக இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. ஆனால் 50 லட்சம் பாக்யராஜிக்கு கொடுக்கப்பட்டதாக கூறுகிறது மற்றொரு தரப்பு.

இது இப்படி இருக்கும் போது பவர் ஸ்டாருக்கு மவுசு கூடிக்கொண்டே போகிறது. இதற்கு முன்பு நிறைய சொந்தப்படங்கள் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் கோலிவுட்டின் செம காமெடியன் என எல்லோரும் கலாய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா மூலம் பவர் ஸ்டார் உண்மையிலேயே ஸ்டாராகிவிட்டார். ஷங்கரின் ஐ எஸ்.எம்.எஸ். இயக்குனர் ராஜேஷின் யா யா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார்.

படம் ஹிட்டு. பவர் ஸ்டாருக்குத்தான் லட்டு....!..