சாமி வந்தாச்சு


மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அரவிந்த்சாமி, 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் மூலமாகவே ரீஎன்ட்ரி ஆகிறார்.

அரவிந்த்சாமி சினிமாவிற்கு வருவதற்கு முன் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்தவர். அவர் முதன்முதலில் தளபதி படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்தார். அதன் பிறகு மணிரத்னம் மூலமாகவே ரோஜா, பம்பாய் என தொடர்ந்து ஹீரோவாக நடித்தார்.


தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் மணிரத்னம் படம் தவிர மற்ற படங்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. கடந்த சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தவர் இப்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் ரீஎன்ட்ரி ஆகிறார். ஆனால் இம்முறை ஹீரோவாக இல்லை. கதாநாயகனின் தந்தையாக நடிக்கிறார். நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் எனக்கூறும் இவர் நிலைத்து நிற்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...