இட்லி சாம்பார்

எத்தனை விதமான டிபன் ஐட்டங்கள் இருந்தாலும் தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு இட்லி என்றால் கொள்ளைப் பிரியம். அதுவும் இட்லியும் சாம்பாரும் இருந்துவிட்டால்... அப்பப்பபா... அருமையான காம்பினேஷன். குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோருககும் ஏற்ற எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு இட்லி.

இட்லி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - ஒரு கப்
சாம்பார் வெங்காயம் - அரை கப்
பெரிய வெங்காயம் நறுக்கியது - சிறிதளவு
தக்காளி - 2
வெல்லம் - சிறிதளவு
கடுகு - சீரகம் - தலா ஒரு டீ ஸ்பூன்
புளி கரைத்த தண்ணீர் - 1கப்
மஞ்சள் துாள் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - ஒரு டீ ஸ்பூன்
தனியா - 2 டீ ஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
வெந்தயம் - சிறிதளவு

தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து கடுகு சீரகம் போட்டு தாளித்த பிறகு பெரிய வெங்காயம் சாம்பார் வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் மஞ்சள் துாள் சேர்த்து புளியைக் கரைத்த தண்ணீரைக் கலந்து கொதிக்க விடவும். இதனுடன் தக்காளியை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் பருப்பு உப்பு வெல்லம் வறுத்த பொடியைப் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும்.