நீங்கள் முறமா? சல்லடையா?

உலகில் இரு வகையான மனிதர்கள் உள்ளனர். புடைக்கும் முறத்தை போன்றவர்களும், சலிக்கும் சல்லடை போன்றவர்களும்.

முறமானது புடைக்கும் பொழுது பயனுள்ளவற்றை நிறுத்தி பயனற்றவற்றை கீழே தள்ளி விடும்.

சல்லடையானது பயனற்றவற்றை மேலே நிறுத்தி வைத்து பயனுள்ளவற்றை கீழே தள்ளி விடும்.

பயனுள்ளவற்றை மட்டும் எடுத்து கொண்டு பயனற்றவற்றை உதறி விடுவது வாழ்க்கையில் வளம் பெற உதவும்.