வெற்றிக்கு ஒன்பது வழி

வாழ்கையில் வெற்றி பெற நாம் பல்வேறு போராட்டங்களை அன்றாடம் சந்தித்து வருகிறோம். வெற்றி சிலருக்கு எளிதாகவும் சிலருக்கு போராட்டமாகவும் அமைந்து விடுகிறது. வெற்றியாளர்கள் பின்பற்றும் வழியை நாமும் பின்பற்றினால் பிறருக்கு மட்டுமல்ல; நமக்கும் வெற்றி எளிதாகிவிடும்.

  1. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பேற்கும் தெளிவு.
  2. நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்
  3. விரும்பியதை அடைவதற்கான  விலையை கொடுக்க தயாராக இருத்தல்.
  4. நீங்கள் நினைப்பதை மற்றவர் உணர செய்தல். 
  5. நம் வெற்றிக்கு துணை புரிபவர்களின் தேவையைப் புரிந்து கொள்ளுதல்.
  6. நம் மேல் நமக்கு உள்ள நம்பிக்கையை போல் மற்றவர்களுக்கும் நம் மேல் நம்பிக்கை ஏற்படும்படி நடத்தல் 
  7. நினைத்ததை சாதிப்போம் என்ற கற்பனை உணர்வு.
  8. இலக்கைத் தவிர வேறு பக்கம் கவனம் சிதறாமல் இருத்தல் 
  9. புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தயார்படுத்தி கொள்ளுதல்.

இந்த ஒன்பது வழிகளை பின்பற்றிப் பாருங்கள்! நீங்களும் வெற்றிப் பாதையில் வீறு நடை போடுங்கள்!