சிவராத்திரியும் வழிபாட்டு முறையும்

 சிவனுக்கு பிரியமான ராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி என்பதில் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம், இன்பம் என்ற பொருள் கொள்ளலாம். சிவராத்திரி என்றால் ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்றெல்லாம் அழைக்கலாம்.

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அவரவர் குலதெய்வ வழிபாடு செய்ய, வருடத்தில் ஒருநாளாக சிவராத்திரி நாளையே தேர்ந்தெடுத்து வழிபட்டு வருகின்றனர். சிவனை வழிபடுவோர் எவருக்கும் அஞ்சத் தேவையி்ல்லை. சிவா என்ற திருப்பி எழுதினால் வாசி என்று வரும். வாசி என்றால் மூச்சுக்காற்று என்று பொருள். மூச்சுக்காற்றாக இருந்து நம்மை இயக்குபவர் சிவபெருமான். எனவேதான் எழுதத் தொடங்கும் போது கூட உ சிவமயம் என்று எழுதத் தொடங்குகிறோம். இதன் பொருள் உலகம் சிவமயமானதாகும் என்பதாகும்.