பிள்ளையாரை வணங்கும் முறை

ஒவ்வொரு தெய்வத்தையும் வணங்குவதில் சில முறைகள் உண்டு.

பிள்ளையாரை வணங்கும் முறை தெரியுமா?

முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப்பக்கத்திலும் இடக்கையால் வலப்பக்கத்திலும் தலையில் 3 முறை குட்டி காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டு வணங்க வேண்டும்.

நம் பாவங்கள் பிள்ளையார் அருளால் உடைந்து சிதறுவதாக நினைத்தபடி தேங்காயை ஓங்கி அடித்து சிதறவிட்டு நம் தீவினைகள் தொலைந்ததாக எண்ண வேண்டும்.