சிவராத்திரியின் மகிமை

 
கையிலாயத்தில் சிவபெருமான் ஒரு சமயம் தேவியுடன் வில்வமரத்தடியில் அன்னையின் மடியில் சயனித்திருந்தார். அது பிரதோஷ நாளின் மாலை நேரம். அந்த நேரத்தில் வில்வமரத்தின் மேல் ஒரு குரங்கு இருந்தது. அது விளையாட்டாக வில்வமரத்தின் இலைகளை பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த இலைகள் ஒவ்வொன்றாக சிவனின் மீது விழுந்தபடி இருந்தன. 108 முறை வில்வ இலை விழுந்தவுடன் சிவன் அந்த குரங்கிடம் நீ எனக்கு பிரியமான வில்வ இலையால் என்னை பூஜித்தாய். எனவே, நீ 1008 ஆண்டுகள் சக்ரவர்த்தியாக இருந்து அரசு செலுத்தி சிவபதவியை அடைவாய் என்று அருள்பாலித்தார். இவ்வாறு சிவன் அனுக்கிரஹம் பெற்ற குரங்கே மறுபிறவியில் முசுகுந்த சக்ரவர்த்தியாவார். சிவராத்திரியன்று வில்வ இலையால் சிவனை பூஜித்தால் சர்வ நலமும் பெறலாம்.