தரையில் விழுந்து வழிபடுவதன் நோக்கம்

 
கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி முடித்தவுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்து கொடிமரத்தின் கீழ் வணங்க வேண்டும்.

சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது நமது உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி விழுந்து வணங்குவதை தமிழில் தண்டலிடுதல் என்று கூறுவார்கள். ஆதாரமற்ற ஒரு தண்டம் அல்லது கோல் கீழே விழுந்து விடுவதைப் போல் இறைவனையே அடைக்கலமாகக் கொண்டு அவனை முழுவதும் சரண் அடைவதன் வெளிப்பாடே சாஷ்டாங்க நமஸ்காரமாகும். இதன் காரணமாகவே கோவிலில் தரையில் விழுந்து வணங்குகிறோம்.