சிவபெருமான் வீரச்செயல் புரிந்த எட்டு ஊர்கள்சிவ பெருமான் வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் எட்டு. இவற்றை அட்ட வீரத் தலங்கள் என்றழைக்கின்றனர். அட்டம் என்றால் எட்டு என்று பொருள். தமிழகத்தில் எட்டு இடங்களில் இத்தலங்கள் உள்ளன.
 
திருக்கண்டியூர் - பிரம்மன் சிரம் கொய்தது.
திருக்கோயிலூர் - அந்தகாசூரனை அழித்தது.
திருவதிகை - திரிபுரம் எரித்தல்.
திருப்பறியல் - தக்கமன் சிரம் கொய்தது.
திருவிற்குடி - சலந்தா சூரனைஅழித்தது.
வழுவூர் - யானையை உரித்தது.
திருக்குருக்கை - காமனை எரித்தது
திருக்கடவூர் - எமனை உதைத்தது