ராமன் செய்ததைச் செய்!

ராமன் செய்ததைச் செய்! கிருஷ்ணன் சொன்னதைச் செய்!  என்பது பழமொழி.  இராமபிரான் செய்த நற்காரியங்களின்படி நாம் நடக்க வேண்டும். கிருஷ்ண பகவான் கீதையில் சொல்லியவாறு செய்ய வேண்டும். அதனால் நற்பலன்கள் கிட்டும் என்பதே பழமொழிக்கான காரணம்.

ராம் என்று கூறும் போது ரா என்னும் போது உதடு பிரிகிறது. பாவம் வெளியேறுகிறது. ம் என்னும் போது உதடு இணைகிறது. வெளியிலுள்ள பாவம் உள்வராது என்று அர்த்தம். எனவே ராம நாமம் உயர்ந்ததாக கருதப்படுகிறது.