நந்தியின் காதில் பிரார்த்தனையைக் கூறலாமா?

சிவாலயம் செல்பவர்கள் முதலில் நந்தி தேவரை வணங்கி மானசீகமாக அவரிடம் அனுமதி வாங்கிய பிறகே சிவனை வழிபடச்செல்ல வேண்டும் என்பது மரபு. அதைத் தவிர நந்தியின் காதில் நமது வேண்டுதல்களை முறையிடுதல் சாஸ்திரப்படி சரியானதல்ல.

ஆலயங்களில் உள்ள சிலைகளை அர்ச்சகர்களைத் தவிர பிறர் தீண்டுதல் கூடாது. ஆகம விதிப்படி அது தவறானதும் கூட.

நமது வேண்டுதல்களை இறைவன் முன்னிலையில் மனதுக்குள் பிரார்த்தனை செய்தாலே போதுமானது. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவன் நம் வேண்டுதலுக்கு நிச்சயம் செவி மடுப்பான்.