மார்க்கெட்டிங்: செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்

question markபிஸினஸ் என்றாலே அதன் முக்கியமான ஒரு அம்சம் மார்க்கெட்டிங். பெரும்பாலான தொழில்கள் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சரியான மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்தாமல் போவதுதான். எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
  • சிறப்பான மார்க்கெட்டிங் என்பது பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தி செய்யப்படுவது. சந்தையை முழுமை யாக ஆய்வு செய்த பிறகே தொழிலில் இறங்க வேண்டும். எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என இறங்கக் கூடாது. கற்பனைக் கோட்டையால் மட்டுமே நமது தயாரிப்பை அல்லது சேவையை விற்றுவிட முடியாது.
  • ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு விதத்தில் மாறுபட்டது. ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்தி வேறொரு நிறுவனத்திற்கு ஒத்து வராது.
  • உங்கள் தொழிலை சந்தைப்படுத்தவில்லையென்றால் நீங்கள் தொழிலில் நிலைக்க முடியாது. இருட்டில் நின்று கண்ணடித்தால் உங்கள் காதலருக்கோ, காதலிக்கோ தெரியுமா? நீங்கள் என்ன பிஸினஸ் செய்கிறீர்கள்? உங்கள் தயாரிப்பின் சிறப்பம்சம் என்ன? என்பதை உங்கள் வாடிக்கையாளர் அறியச் செய்ய வேண்டாமா?
  • எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள் என்பது நிதி வல்லுநர்களின் அறிவுரை. அதே அறிவுரையை நாம் பொருளை சந்தைப்படுத்தவும் பயன்படுத்தலாம். அதாவது உங்கள் மார்க்கெட்டிங் உத்தி அனைத்திற்கும் ஒரே தளத்தை பயன்படுத்தாதீர்கள். உதாரணமாக நீங்கள் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறீர்கள் என்றால் அதை மட்டுமே செய்து கொண்டிருக்காமல் மாற்று வழியையும் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய முடியும்.