உங்கள் நிறுவனத்திற்கான லோகோ

ன்றாக, அழகாக வடிவமைக்கப்பட்ட லோகோ வாடிக்கையாளர்களிடம் நிறுவனம் பற்றிய ஒரு நன்மதிப்பை உருவாக்கும். சந்தையில் உங்களது நிறுவனத்திற்கான தனி அடையாளத்தைக் கொடுக்கும். சந்தையில் உங்களது நிறுவனமும், உங்களது தயாரிப்பும் பன்னெடுங்காலம் நிலைத்து நிற்பதற்கு லோகோ மிக மிக அவசியம்.

உங்கள் பிராண்ட் கலர் என்ன? உங்கள் லோகோவுக்கு என்ன குறியீடு உபயோகப்படுத்தப் போகிறீர்கள்? உங்கள் லோகோவின் தனித்துவம் என்ன என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

உங்கள் லோகோவிற்கு என்ன நிறம் உபயோகப்படுத்தப் போகிறீர்கள் என்பதில் கவனமாக .இருக்க வேண்டும். ஒரு அறைக்குள் நுழையும் உங்களுக்கு மனம் அமைதி பெறும். சில இடங்களில் உங்கள் எண்ண அலைகள் வேறு மாதிரி இருக்கும். இதற்கெல்லாம் நிறம் ஒன்றே காரணம். மருத்துவமனைகளில் பச்சை நிற படுக்கை, பச்சை நிற சுவர் எல்லாம் இருக்க காரணம், பச்சை நிறம் மன அமைதியைக் கொடுக்கும் என்பதால்தான்.

பெரும்பாலான நிறுவனங்கள் ஆகாய நீல நிறத்தினை தங்கள் லோகோவுக்கு பயன்படுத்திய இருப்பார்கள். அதற்கு காரணம் நீலம் என்பது எல்லையற்றது என்பதைக் குறிப்பதற்காக. அதாவது எங்கள் நிறுவன சாம்ராஜ்யம் எல்லையற்று விரிந்து பரந்து இருக்கிறது என்பதைக் குறிப்பதற்காக.

சிவப்பு வண்ணத்திற்கு கவர்ச்சி அதிகம். அதனால் தான் பெண்களுக்கான தயாரிப்புகள், கன்ஸ்யூமர் குட்ஸ் எனப்படும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்கு சிவப்பு வண்ணத்தில் பெயர் இருக்கும்.

லோகோவில் அதிகமான வார்த்தைகள், அதிகமான படங்கள், புரிந்து கொள்வதற்கு கடிமான வடிவமைப்பு என்று இருக்கக்கூடாது. 'சிம்பிள் ஈஸ் பெஸ்ட்' என்பது போல எளிய வடிவமைப்பே எல்லோரையும் எளிதில் கவரும்.

விசிட்டிங் கார்டானாலும் சரி, விளம்பரப் பலகையானாலும் சரி. எந்த இடத்திற்கும் பொருத்தமானதாக உங்கள் லோகோ இருக்க வேண்டும். அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் பொருளின் முதல் விளம்பரமே லோகோதான்.