சிறு தொழிலை சிறப்பாக நடத்த சின்னச் சின்ன யோசனை


செலவுகளைக் குறைக்க....

உங்கள் தொழிலுக்கு முழு நேர பணியாளர் தேவையில்லையெனில் பகுதி நேர பணியாளரை பணியமர்த்திக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் நிறுவன வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்ய முடியுமானால், முழு நேர பணியாளருக்கு ஆகும் செலவை விட ஒப்பந்தப் பணியாளர் மூலம் செய்வதால் செலவு குறையுமென்றால் அந்த வழியை நீங்கள் பின்பற்றலாம்.

பணியாளர் மகிழ்ச்சியுடன் பணிபுரிய...

பணியிடமும், பணிச்சூழலும் செம்மையாக இருந்தால் பணிபுரிபவர்களும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்கிறது உளவியல் அறிக்கை. எனவே, பணியிடத்தை சிறப்பாக வைத்திருப்பதும், பணிச்சசூழல் அதிக மன உளைச்சல் இல்லாமல் இருக்கும்படி செய்ய வேண்டும்.

உங்கள் பணியாளருக்கு மற்ற நிறுவனங்கள் தரும் சம்பளத்தை விட சற்று கூடுதலாகக் கொடுத்துப் பாருங்கள். உங்கள் உற்பத்தியும் பெருகும். விற்பனையும் கூடும்.