பிஸினஸ் பார்ட்னர் தேவையா?

வாழ்க்கைக்கு ஒரு லைஃப் பார்ட்னர் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறோமோ இல்லையோ, பிஸினஸுக்கு பார்ட்னர் சேர்ப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
திருமண பந்தம் முறிந்து விடுகிறதென்றால் அது மனதளவில் காயம் ஏற்படுத்துவதோடு சரி. ஆனால் பிஸினஸ் பார்ட்னர்ஷிப் சிக்கல் உண்டாக்குகிறதென்றால், பொருளாதார ரீதியான பிரச்சினைகள் நம்மை மீண்டும் பிஸினஸில் தலை தூக்கதவாறு செய்துவிடும். 

உங்களிடம் திறமை இருக்கிறது, முதலீடு செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய பார்ட்னரை தேர்ந்தெடுக்கலாம். பணம் இருக்கிறதென்றால், தொழில் திறமை வாய்ந்த ஒரு நபரை பார்ட்னராக தேர்ந்தெடுக்கலாம். முதலில் வருபவர் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர். இரண்டாமவர் வொர்க்கிங் பார்ட்னர்.

நீங்கள் மார்க்கெட்டிங்கில் சிறந்து விளங்குகிறவர் என்றால், அலுவலக நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவரை பார்ட்னராக்கிக் கொள்ள வேண்டும்.

கணவனுடன் ஒத்துப் போகக் கூடிய மனைவி, மனைவியை அனுசரித்துச் செல்லும் கணவன் என்று இருக்கும் குடும்பம் எப்படி இருக்குமோ, உங்கள் குணாம்சத்தோடு ஒத்துப் போகக்கூடிய, உங்களிடம் இல்லாத ஒரு திறமையை உள்ளடக்கிடய ஒரு நபரை நீங்கள் பார்ட்னராக்கிக் கொண்டால் உங்கள் தொழிலும் அவ்வாறே இருக்கும்.

திருமணத்தில் இணைபவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டால் சட்ட ரீதியிலான பாதுகாப்பு உண்டு. என்னதான் நண்பர் என்றாலும், உறவினர் என்றாலும் பார்ட்னராக்க முன்வரும் போது, முறையான பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் செய்து கொண்டால் மட்டுமே பின்னாளில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

உங்களால் முதலீடு செய்ய முடியும், உங்களிடம் தேவையான தொழில் திறமை இருக்கிறது, எந்தச் சூழலிலும் உங்களால் தனித்து நின்று சமாளிக்க முடியும் என்றால் நீங்கள் தனித்து தொழில் செய்வதே சிறப்பானது. பார்ட்னரைத் தேட வேண்டிய அவசியமே இல்லை.