பிடிவாத குணம் மிக்க மேஷ லக்னக்காரர்கள்

ராசிகளில் முதன்மையான ராசி மேஷம். இதன் அதிபதி செவ்வாய்.

மேஷ லக்ன காரர்கள் உற்சாகமும், சுறுசுறுப்பும் மிக்கவர்கள். நேர்மையானவர்கள். கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

மனஉறுதியும் பிடிவாத குணமும் இருப்பதால் எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். பிரச்சினைகளை சமாளிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை இவர்களுக்கு உண்டு.

துணிவும், நம்பிக்கையும் கொண்டவர்கள்.. இவர்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

விட்டுக்கொடுத்துப் போகும் மனப்போக்கு இல்லாததால் பல்வேறு இன்னல்கள் ஏற்படும்.

மருத்துவம், ராணுவம், நிர்வாகம் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றது.