பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட மிதுன லக்னகாரர்கள்

புதன் கிரகம் அதிபதியாக விளங்கும் லக்னம். புதன் கல்வி, எழுத்து, கணித்ம் போன்றவற்றில் நிபுணத்துவம் தருபவன்..எனவே இவர்கள் எழுத்தாளர், சிந்தனையாளர், ஆராய்சியாளர் என அறிவு சார்ந்த துறைகளில் ஈடுபட்டிருப்பார்கள். கல்வித்துறையில் சிறந்து விளங்குவார்கள்.

இவர்கள் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்போக்கு கொண்டவர்கள். சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அறிவாளிகள். சாதுர்யமாக பேசுவார்கள். பொறுமையும் நிதானமும் மிக்கவர்கள்.

எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையுடையவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். ஒரு வேலையில் இருந்து கொண்டே மற்றவற்றில் கவனம் செலுத்துவார்கள். இதனால் பிறரது விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும்.