கற்பனை வளம் மிகுந்த மீன லக்ன காரர்கள்

குரு பகவானின் ஆட்சி வீடான மீன லக்னத்தில் பிறந்தவர்கள் அனைவரையும் ஈர்க்கும் தோற்றம் கொண்டவர்கள்.

எளியோரிடத்தில் இரக்க சுபாவம் கொண்டவர்கள். நல்ல குணங்கள் கொண்ட இவர்கள் வெகுசீக்கிரத்தில் பிறரது நம்பிக்கைக்கு உரியவராவார்கள்.

ம்னிதாபிமானம், தயாள சிந்தனை நிரம்பியவர்கள். வாக்கு ஸ்தான அதிபதி குருவின் ஆட்சி வீடான மீன லக்னத்தில் பிறந்தவர்கள் வாக்குவன்மை மிக்கவர்கள். இவர்களுடன் பேச்சுக் கொடுத்து வெற்றி பெறுவது கடினம்.

தெய்வ பக்தி மிக்கவர்கள். கலை மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். கற்பனை வளம் மிகுந்தவர்கள். இசை, நாடகம், எழுத்து போன்ற துறைகளில் இருப்பர். ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கும்.

சுகபோக வாழ்க்கை வாழ விரும்பும் இவர்கள் அழகு சாதனங்கள், உயர்ரக துணி வகைகள் அணிவதில் ஆர்வம் காட்டுவர். குடும்பத்தினரிடத்தில் அன்புடன் நடந்து கொள்ளும் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிட்டும்.