கலைத்துறையில் கைதேர்ந்த ரிஷப லக்னக்காரர்கள்

ன்பானவர்கள். அனைவரிடமும் சகஜமாகப் பழகும் குணம் படைத்தவர்கள். புத்தி சாமார்த்தியமும், ஞாபக சக்தியும் மிக்கவர்கள்.

இந்த லக்னத்துக்கு அதிபதி சுக்கிரன். எனவே, இவர்களுக்கு சுக்கிரன் ஆதிக்கம் அதிகம் இருக்கும். சுக்கிரன் கலைக்கு காரகன். நடனம், நாடகம், நடிப்பு, இசை போன்றவற்றில் ஆர்வம் மிகுந்தவர்கள்.

செய்கின்ற காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவார்கள். மன உறுதி மிக்கவர்கள். பிறர் மீது அதிகாரம் செலுத்த மாட்டார்கள். ஒரு காரியத்தை முடித்துவிட்டே அடுத்த வேலையில் ஈடுபடுவார்கள். அரை குறையாகச் செய்யும் பழக்கம் இவர்களுக்கு இல்லை.

அமைதியானவர்கள். எளிதில் கோப்ப்பட மாட்டார்கள். இவர்களது வாழ்க்கை அமைதியாக இருக்கும். பெண்கள் மீது மிகுந்த அன்பு மிக்கவர்கள்.