புகழ்ச்சியை விரும்பும் கடக லக்னகாரர்கள்

டக லக்னத்தின் அதிபதி சந்திரன். மனதிற்கு உரியவன் சந்திரன் ஆதலால் சந்திரன் வளர்வதும் தேய்வதுமாக இருப்பது போன்று இவர்கள் மனமும் நிலையாக இருக்காது. குடும்ப் பற்று மிக்கவர்கள். இவர்களது அன்புக்குரியவர்களுடன் மிகுந்த நட்புடன் பழகுவார்கள். நண்பர்களுக்காக தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்கள்.

புகழ்ச்சிக்கு மயங்கிவிடுவார்கள். எனவே இவர்களை புகழ்ந்து பேசினால் வசப்படுத்தி விடலாம். கற்பனாவாதிகள். சதா சர்வ காலமும் கற்பனையிலேயெ காலம் கழிப்பவர்கள். கவி புனையும் ஆற்றல் உண்டு.