விரைவில் திருமணம் புரியும் துலா லக்னகாரர்கள்


சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதால் அழகும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவர்கள். பார்த்த மாத்திரத்தில் பிறரை எடை போட்டுவிடுவார்கள்.

உணர்வகளுக்கும், உணர்ச்சிகளும் முக்கியத்துவம் கொடுப்பர். எளதில் பிறருடன் நட்பு கொள்வார்கள்.

வியாபரத்துறையில் சிறந்து விளங்குவார்கள். கடவுள் பக்தி கொண்டவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் சமூக நலப்பணிகளில் நாட்டம் மிக்கவர்கள்.

எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக கையாளுவார்கள். இவர்களது வேலையில் ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் இருக்கும்.

மனைவி, மக்கள், குடும்பம், நண்பர்கள் என வாழ விரும்புபவர்கள். சுக்கிரன் அதிபதியாக விளங்குவதால் இவர்களுக்கு விரைவிலேயே திருமணம் நடந்துவிடும்.