தாராள மனப்பான்மை கொண்ட தனுசு லக்ன காரர்கள்

குரு அதிபதியாக விளங்கும் லக்னம். நல்ல ஒழுக்கமுடையவர்கள். இளகிய மனம் கொண்டவர்கள். பெரியோர்களையும், மதித்து நடப்பார்கள் பிறருக்கு உதவும் தயாள குணம் கொண்டவர்கள்.

சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சுதந்திரத்தை விரும்புபவர்கள். அமைதியான தோற்றமுடையவர்கள். சிரித்த முகத்துடன், இருப்பார்கள்.

வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் ஆர்வம் இருக்கும். மத அமைப்புகளில் சேர்ந்திருப்பர். உயர்ந்த சிந்தனை, எண்ணங்கள் கொண்டவர்கள்.

ஆடை, அணிகலன் என என அலங்காரம் செய்து கொள்வதில் ஈடுபாடு உள்ளவர்.

இந்த லக்னத்துக்கு அதிபதி குரு ஆதலால், பிறருக்கு ஆலோசனை சொல்வதில் சமர்த்தர். நீதிபதி, வழக்கறிர், ஆன்மீகம் என பிறருக்கு ஆலோசனை தரும் இடத்தில் இருப்பர்.

தெய்வப் பற்று மிக்கவராதலால் புனித யாத்திரை, பிரயாண்ங்கள் போன்றவற்றில் ஆர்வம் காணப்படும்.

கோபம் இவர்களுக்கு எதிரி. கோப்த்தினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். கோபம் கொண்டாலும் பின்னர் அதை நினைத்து வருந்துவர்.