நியாயமும், நேர்மையும் கொண்ட கும்ப லக்ன காரர்கள்

ல்லோருடனும் நட்புடன் பழக விரும்புவார்கள். பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வர். நல்ல சிந்தனை, அறிவாற்றல் மிக்கவர்கள்.

அமைதியாகவும், நேர்மையாகவும் நடப்பர். ஞாபகசக்தி மிக்கவர்கள். உறுதியான மனம் படைத்தவர்கள் உள்ளத்தில் தோன்றுவதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவார்கள். 
நியாயம், நேர்மையுடன் எதையும் தையரியமாக செய்வார்கள். பல்வேறு ஏற்றதாழ்வுகளை சந்திப்பார்கள். சமூக சீர்திருத்த கொள்கையில் ஆர்வம் மிக்கவர்கள். தொழில்நுட்பம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் முன்னேறுவர்.