காரியத்தில் கண்ணாயிருக்கும் விருச்சிக லக்னகாரர்கள் துணிச்சலுடன் காரியம் ஆற்றுவதில் வல்லவர். குறிக்கோளை அடைவதில் உறுதியுடன் செயல்படுவர். எண்ணத்தை செயல்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதால் பிறருக்கு ஏற்படும் சிரமங்களை பொருட்படுத்த மாட்டார்கள்.

தனித்து தொழில் செய்வதையே விருமபுபவர்கள். பிறருக்கு கீழ் வேலை பார்ப்பதில் ஆர்வம் இருக்காது.

இவர்களது வாழ்கையில் பல விஷயங்களுக்கு போராட வேண்டி வரும் இருப்பினும் எத்தனை தடங்கல்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் சமாளித்து விடுவார்கள்.

விருப்பு, வெறுப்பு என இரு வேறு குணங்கள் கொண்டவர்கள். உணர்ச்சிவசப்படுபவர்கள். பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள். எளிதில் திருப்தியடைய மாட்டார்கள்.

உணர்ச்சிவசப்படுவதும், கோபம் மிகுந்து காணப்படுவதும் இவர்களது பலவீனம்.