சாதனை செய்வதில் சமர்த்தர்கள் சிம்ம லக்ன காரர்கள்

சிம்ம்ம் என்ற பெயருக்கு ஏற்ப துணிச்சல், தன்னம்பிக்கை, மன உறுதி படைத்வர்கள். இந்த லக்னத்தின் அதிபதி சூரியன்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு மிக்கவர்கள். கம்பீரமான தோற்றம் இருக்கும். திடபுத்தி கொண்டவர்கள். துணிச்சலான காரியங்களைத் தயங்காமல்செய்து முடிக்கும் துணிவு மிகுந்தவர்கள்.

ஆடை, அணிகலன்கள் மீது விருப்பம் மிக்கவர்கள். பேச்சின் மூலம் பிறரை வசப்படுத்தும் ஆற்றல் உண்டு.

தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிட மாட்டார்கள். எத்தனை பெரிய திட்டங்கள் தீட்டினாலும் அதை நிறைவேற்றி விடுவார்கள்.

தங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். தீங்கு செய்தவர்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். நல்ல நண்பர்களிடம் உண்மையாக இருப்பார்கள். சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

பிடிவாதம், முன்கோபம் இவர்களது பலவீனம்.