அமைதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் கன்னி லக்ன காரர்கள்


ன்னி ராசியின் அதிபதி புதன். வித்தைக்கு உரியவன் புதன் என்பதால் இவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். க்ணிதம், வியாபாரம், என அனைத்திலும் சிறந்தவர்கள். புத்தகங்கள் படிப்பதிலும், கலைகளை கற்பதிலும் ஆர்வம் மிகுந்தவர்கள். அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர்.

அமைதியான வாழ்க்கை வாழ்வார்கள். மனம் விட்டு பேச மாட்டார்கள். தேவையென்றால் மட்டுமே பேசுவார்கள்.

எதையும் சுலபத்தில் புரிந்து கொள்ளும் இவர்கள் ஞாபக சக்தி மிக்கவர்கள். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும்  தகுந்த ஆலோசனைகளைக் கேட்ட பிறகே செயல்படுவார்கள்.

பத்திரிக்கையாளர்கள், ஆடிட்டர்கள், கணக்கர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளில் இருப்பர்.