பழையன கழிதலும்; புதியன புகுதலும்...


புத்தாடை அணிந்து, புதுப்பானைதனில் புத்தரிசிப் பொங்கலிட்டு, உற்றார்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துச் சொல்லி சிறப்பாக கொண்டாடப்படும் தமிழர்களின் திருநாள் தைத்திருநாள்.

ஆனால், காலமாறுதலின் சூழலுக்கேற்ப வாழ்த்துச்சொல்லும் பழக்கமும், புத்தாடை    அணியும் பழக்கமும் புத்தாண்டு, தீபாவளி என்று மேலைநாட்டு பழக்க வழக்கங்களுக்கும், வடநாட்டினரின் பழக்க வழக்கங்களுக்கும் மாறி தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மறந்துவிடுகிறோம்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான் பாரதி. உழவின் மகத்துவம் நாம் அறியாததல்ல. விளைநிலங்களெல்லாம் குடியிருப்பாக மாறிவரும் வேளையில் மேற்சொன்ன பழக்க வழக்கங்களும் நம்மைவிட்டு விலகிச்செல்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொல்லுக்கு உண்மை அர்த்தத்தை உணர்வோம். தேவையற்ற விஷயங்களை மட்டும் ஒதுக்குவோம். புதியனவற்றை புகுத்துவோம். ஆனால் பழைய பழக்க வழக்கங்களை மாற்றாமல், முதல் மூன்று வரிகளை மறவாமல் மனத்தில் நிறுத்தி தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.