மானம் காப்பீரா?கண்ணனுக்கும் கோவிலுண்டு
திரௌபதிக்கும் கோவிலுண்டு

கன்னியவள் கடைத் தெரு போனால்
கற்பிழக்கும் சேதியுண்டு

திரௌபதியின் மானம் காக்க
கண்ணன் அவன் உதவியதுண்டு

கன்னியவள் மானம் காக்க -
கண்ணனும் வருவதில்லை
திரௌபதியும் வருவதில்லை.

- கவிமதி
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...