தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள் :
tomato
 • தக்காளி - 5
 • பெரிய வெங்காயம் - 2
 • பூண்டு - 5 பல்
 • சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
 • புளி- சிறிதளவு
 • மஞ்சள் தூள் - சிறிதளவு 
 • உப்பு - தேவைகேற்ப 
 • பட்டை - சிறிது 
 • லவங்கம் -1
 • ஏலக்காய் -1
 • எண்ணெய்
 • மல்லித்தழை - சிறிதளவு 
 • பச்சை மிளகாய் -4
 • கசகசா - 1 ஸ் பூன்,
 • சீரகம் - அரை ஸ்பூன்,
 • சோம்பு - அரை ஸ்பூன்
 • தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்

செய்முறை :
tomato curry
கசகசா, சீரகம், சோம்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.

பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் தக்காளி, மல்லித்தழை விழுது, சாம்பார் பொடி சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...