பொட்டுக்கடலைக் குழம்பு

தேவையான பொருட்கள் :
  • சாம்பார் வெங்காயம் - 5
  • தக்காளி - 2
  • தேங்காய்  துருவல் - கால் கப்
  • பச்சை மிளகாய்  - 5 
  • பொட்டுக் கடலை - 1 டேபிள்  ஸ்பூன்
  • கொத்துமல்லித்தழை - சிறிதளவு 
  • உப்பு - தேவைக்கேற்ப 
  • எண்ணெய்  2 டேபிள்  ஸ்பூன்
  • பட்டை - சிறிய துண்டு
  • எண்ணெய்  - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பொட்டுகடலை, கொத்துமல்லி இவற்றுடன்  உப்பு சேர்த்து அனைத்தையும் எண்ணெயில் போட்டு வதக்கி, ஆறவைத்து  மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

வானலியில் எண்ணெயைக் காயவைத்து, பட்டையைத் தாளித்து, அரைத்த மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக்கரைத்து ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற குழம்பு இது.