அப்பளக்குழம்பு

தேவையான பொருட்கள் :
 • அப்பளம் - 3
  Appalam
 • புளி - 50 கிராம்
 • மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன், 
 • பெருங்காயம் - சிறிதளவு 
 • மஞ்சள்தூள் - சிறிதளவு
 • கறிவேப்பிலை - சிறிதளவு
 • உப்பு - தேவையான அளவு
 • கடுகு - சிறிதளவு
 • வெந்தயம் சிறிதளவு
 • உளுத்தம்பருப்பு சிறிதளவு
 • துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய்  2
 • எண்ணெய்  - 100 மி.லி.

செய்முறை:
Appala Kuzhambu
அப்பளத்தை நான்கு துண்டாக உடைத்து கொள்ளவும். 2 கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டவும். 

வானலியில் எண்ணெயைக் காயவைத்து காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின்னர் அப்பளத்தைச் வறுத்து, புளித்தண்ணீரை சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள்  தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

காய்கறி இல்லாத போது சமைக்க ஏற்ற குழம்பு இது.