'பினாமி' பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டுகள் சிறை

Home


ஆகஸ்ட் 17, 2016 : பினாமி பரிவர்த்தனை (தடை) சட்டம் 2016 என்ற புதிய சட்டத்தின்படி கருப்புப் பணத்தை மறைக்க 'பினாமி' பெயரில் சொத்துகளை வாங்கினால் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சொத்தின் சந்தை மதிப்பு விலையில் 25 சதவீத அபராதம் விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.