ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்


ஆகஸ்ட் 18, 2016 : ஹரியானாவை சேர்ந்த  மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளார்.

2016 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.