மயானத்தில் பணிபுரியும் பட்டதாரி பெண்

ஆகஸ்ட் 16, 2016 : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்திக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான, தமிழக அரசின் 'கல்பனா சாவ்லா விருதை' சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா வழங்கி கவுரவித்தார். அவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
இவர் எம்.ஏ., பொருளாதாரம்  படித்தவர். நாமக்கல், சேந்தமங்கலத்தில் உள்ள மின் மயானத்தில், பூங்காவை பராமரிக்கும் வேலையில் உள்ளார். மயானத்தில், உடலை எரிக்கும் ஊழியர்கள், அப்பணியை சுத்தமாகச் செய்யாததால், தானே அந்தப் பணியைச் செய்து வருகிறார்.