கவர்னர் மாளிகையில் பிரிட்டிஷ் கால பதுங்கு குழி

 
 
ஆகஸ்ட் 17, 2016 :  மும்பை கவர்னர் மாளிகையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த 150 மீட்டர் நீளமுள்ள பிரிட்டிஷ் கால பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் கவர்னர்கள் தங்குமிடமாக இருந்த இந்த மாளிகையில் தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ள பதுங்கு குழியில் 20 அடி உயர கதவு, நீண்ட வராண்டா மற்றும் 13 அறைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது,