‘ஸ்வீப்பர்’ பணிக்கு போட்டியிடும் முதுநிலை பட்டதாரிகள்


ஆகஸ்ட் 9, 2016 : உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான 3,275 ‘ஸ்வீப்பர்’ பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வெளியானது.. இதில் 1,500 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும் மற்ற இடங்கள் இடஒதுக்கீடு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படாததால் பட்டம், பட்ட மேற்படிப்பு என உயர்கல்வி படித்தவர்களும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை சுமார் 5 லட்சம் விண்ணப்பங்கள்  குவிந்துள்ளன.