ஸ்நாக்ஸ் செலவு 8 கோடி ரூபாய்செப். 1, 2016 : உத்தரப் பிரதேசத்தில் தேநீர், திண்பண்டத்துக்காக அமைச்சர்கள் ரூ.9 கோடி வரை செலவிட்டுள்ளதாக உத்தரப் பிரதேச  முதல்வர் அகிலேஷ் யாதவ் சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “அமைச்சர்களைச் சந்திக்க வருபவர்களுக்கு தேநீர், திண்பண்டம் வாங்கிக் கொடுப்பதற்காக நாளொன்றுக்கு ரூ.2,500 ஒதுக்கப்படுகிறது. அமைச்சர்கள்  தங்கள் பணிக்காக வெளிமாநிலத்துக்குச் சென்றால் நாளொன்றுக்கு ரூ.3,000 வரை செலவிட அனுமதியுள்ளது. இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 474 ரூபாய் செலவாகியுள்ளது’ என்றார்.