92 பைசாவில் பயணக் காப்பீடு

 
செப். 1, 2016 : ரயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் பயணக் காப்பீடுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் விரும்பினால், பயணக் கட்டணத்துடன் 92 பைசா கூடுதலாக செலுத்தி பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.
 
பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள், ரயில் விபத்து அல்லது பயங்கரவாதத் தாக்குதலில்  பலியானாலோ அல்லது முழுமையாக செயல்படாத அளவுக்கு ஊனமடைந்தாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உடல் உறுப்புகளை இழப்பவர்களுக்கு ரூ.7.5 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரையும் வழங்கப்படும். 

புறநகர் ரயில் பயணிகள், 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், வெளிநாட்டினர் ஆகியோருக்கு இத்திட்டம் பொருந்தாது.
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...