முதன்முறையாக இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி

 
கேரள மாநிலம், கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச விளையாட்டு அரங்கத்தில், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள மாநிலத்தின் கொச்சி நகரம் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடத்துவதற்கான இடங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.