இந்தியா, மியான்மர் உறவுகளை மேம்படுத்த முடிவு

 
கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற  பிறகு மியான்மர் அரசு ஆலோசகரும் வெளியுறவு அமைச்சருமான ஆங் சான் சூகி,  பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். 
 
மோடி மற்றும் ஆங் சான் சூகி தலைமையில் இரு நாட்டுப் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தையில், பாதுகாப்பு, வர்த்தகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வேளாண்மை, புதுப்பிக் கத்தக்க எரிசக்தி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் உறவுகளை மேம்படுத்த முடிவு செய்தன. மேலும் மின்சாரம், வங்கி, காப்பீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் 3 உடன்பாடுகளில் கையெழுத்திட்டன.