இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தானில் தடை

 
காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று  பயங்கரவாத முகாம்களை அழித்தது. 
 
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம், இந்திய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை முழுமையாக தடை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தடை உத்தரவு அக்டோபர் 21-ம் தேதி மாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.