உலக கால்பந்து அணிகள் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்


உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி 148-வது இடத்திலிருந்து முன்னேறி 137-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் மும்பையில் நடந்த சர்வதேச போட்டியில் பியூர்டோரிகோ அணியை வென்று  230 புள்ளிகளை பெற்றதால் இந்திய அணி தர வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. 
அர்ஜென்டினா தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது.