மனித நேயம் காப்பது மனிதனின் கடமையல்லவா?ஆதாம் புரிண்டன், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா , அலோக் மதாசனி

லகப் பொருளதாரம் தாராளமய மாக்கலுக்குப் பின், பெருகி வரும் வேலை மற்றும் தொழில் வாய்ப்பு காரணமாகவும், கல்வி கற்பதற்காகவும் வெளிநாடுகளை தேடிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தாய்நாட்டையும், குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். பிரிவுத்துயர் ஒருபுறம், வேலைப்பளு மறுபுறம். 

அதுமட்டுமின்றி, வெளிநாட்டினர் பிற நாட்டினரை பெரும்பாலும் எதிரியாகவே கருதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இந்திய மாண வர்கள் தாக்கப்பட்டது இதற்கு சரியான உதாரணம்.

சமீபத்தில் அமெரிக்காவில், ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் குச்சிபோட்லா (32), மற்றும் வாரங்கல்லை சேந்த அலோக் மதசானி என்பவர் மீது ஆதாம் புரிண்டன் என்ற அமெரிக்கர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் சீனிவாஸ் மரணமடைந்துள்ளார். அவரது நண்பர் அலோக் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் பணி புரியும் இந்தியர்களால், அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது என்பது அவர்கள் வாதம். ஆனாலும், சக மனிதன் என்றும் கூட பாராமல் துப்பாக்கிச் சூடு நடத்தி உயிரைப் பறித்தது எவ்வகையில் நியாயம்? மனித நேயம் காப்பது மனிதனின் கடமையல்லவா?