மழை தருமோ வெண்மேகம்?


மே மாதம் எப்போது முடியும், கோடை வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்ற ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு ஒரு வழியாக மே மாதம் முடிந்து வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. 

ஆனால், தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து பூமியை குளிர்விக்க, சென்னை நகரம் மழையை காணாமல் தவித்து வருகிறது.

மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்புவதும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுமே வறட்சியின் பிடியிலும், தண்ணீர் தட்டுப்பாட்டிலும் தவித்து வரும் மக்களுக்கு ஆறுதலாக அமையும்.

ஒரு நாள் முழுமையடைய வேண்டு மானால் இரவும், பகலும் மாறி மாறி வர வேண்டும். அதே போன்று, வெயில் காலம், மழை காலம், பனி காலம், இளவேனில் காலம் என்று காலநிலைகள் முறையான சுழற்சியில் இருந்தால்தான், ஓர் அறிவு ஜீவன் முதல் ஆறு அறிவு மனிதன் வரை சுகமாக வாழ முடியும். இயற்கையின் சமநிலையும் கெடாமல் இருக்கும்.

சாலையோர மரங்களை வெட்டி சாலையை விரிவுபடுத்துவதும், ஒரு சதுர அடி இடத்தையும் விட்டுவைக்காமல் கட்டிடங்களை எழுப்புவதையும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் மக்கள் இருக்கும் வரையில், இந்த நீலவானம் வெண்மேகம் வழியாக மழையைப் பொழியுமா?

பசுமையைப் போற்றிக் காப்பதும், இயற்கைக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமே மக்கள் நலமாய் வாழ வழி வகுக்கும்.

 சிந்திப்பார்களா...மக்கள்?