போலி சான்றிதழை ஆன்லைனில் கண்டுபிடிக்கும் வசதி


மிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.

சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் தற்போதைய நடைமுறையால் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது.  

கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதற்கான பயன்பாட்டாளர் அடையாள எண் ரகசிய குறியீடு எண் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை பயன்படுத்தி, மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே, சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம்.