150 ரூபாயில் உலகக் கோப்பை கால்பந்து

Fifa India

கொல்கத்தா, புதுடெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவி மும்பை ஆகிய ஆறு இடங்களில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான  உலகக் கோப்பை கால்பந்து போட்டி அக்டோபர் 6-ம் தேதி முதல் நடைபெறுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 40 ரூபாயாக இருந்தது. தற்போதைய முன்பதிவு கட்டணம்  ரூ.150 என்பதும், அடுத்த கட்ட விற்பனையில் இது 200 ரூபாயாக இருக்கும் என்பதும்   குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான  டிக்கெட்டுக்களை  http://tickets.india2017wc.com என்ற FIFAவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.