ஆசிரியர் தகுதி தேர்வு; தேர்ச்சி பெற 2019 வரை கெடு


"மத்திய அரசின் கல்வியியல் கவுன்சில் மற்றும் தமிழக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். 'இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், 2019, மார்ச், 31க்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்" என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.