ஏர் இந்தியாவை கையகப்படுத்துமா டாடா?


ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அதிக அளவில் கடனும், அதே போல சொத்துக்களும் உள்ளது. இந்நிறுவனம் பெரும் நட்டத்தில் இயங்கி வருகிறது, ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு அளிக்க மத்திய அரசு மும்முரம் காட்டி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக டாடா சன்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களையும் டாடா நிறுவனம் வாங்கி இயக்குவது என்பது கடும் சுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

டாட்டா நிறுவனம், விஸ்த்ரா மற்றும் ஏர் ஆசியா இந்தியா என்ற இரண்டு விமான சேவைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.