தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்; சில தகவல்கள்

Banwarilal Purohit

  • மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பன்வாரிலால் புரோஹித். 
  • 1978 மற்றும் 1980-ல் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் நாக்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். 1982-ல் அமைச்சர் பதவி வகித்தவர்.
  • 1984 மற்றும் 1989-ல் நாக்பூர் கம்டீ தொகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 
  • பாதுகாப்பு அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
  • 2015-ல் அசாம் மாநில ஆளுநராகவும், 2016-ல் மேகாலயா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர்.